உங்கள் வீடு வளமாக..வாழ்க்கை இனிப்பாக வேண்டுமா? இந்த 10 வாஸ்து செடிகளையும் கட்டாயம் வீட்டில் வளருங்க..!
உங்கள் வீட்டில் வசதிகள் கொட்டோ, கொட்டென கொட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கும்தானே? சதா, சர்வநேரமும் வீட்டில் ஏதாவது சண்டை வந்துகொண்டே இருக்கிறது. அந்த சண்டைகள் தீர எதுவும் வழி இருக்கிறதா? என ஒவ்வொருவரும் குழப்பங்களில் இருந்துகொண்டே இருக்கிறார்கள். அதையெல்லாம் வீட்டில் சில செடிகளை வைப்பதன் மூலமே நிவர்த்தி செய்துவிடலாம்.
வாஸ்து செடி வைப்பதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் துரதிஷ்டத்தை ஓட, ஓட விரட்டி அதிர்ஷ்டத்தை இழுத்துவந்துவிட முடியும். அந்த வாஸ்து செடிகளைப் பார்ப்போம் இனி..
செம்பருத்தி : செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கட்டாயமாக செம்பருத்தி செடியை வீட்டில் வளர்க்க வேண்டும். இது தலைமுடிக்கு உகந்தது.
மணிபிளாண்ட்: படரும் கொடிவகையான இது வீட்டில் செல்வ்த்தைப் பெருக்கும்.
தொட்டால்கிணுங்கி: வாஸ்து சாஸ்திரப்படி இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். ஆனால் பொதுவாக இதில் முட்டைகள் இருப்பதால் வீட்டில்வளர்க்கக் கூடாதென பலரும் புரிந்துகொள்கிறார்கள். அதுதவறு.
கற்றாழை: வாச்துரீதியிலான பிரச்னைகள் போக மருத்துவப் பலன்கள் கொண்ட கற்றாழையை வீட்டில் வளர்த்தாலே போதும்.
லக்கி பம்பூ செடி: வீட்டில் செல்வத்தை பெருக்கும் இது ஒரு மூலிகை செடி. ஆக்சிஜனை அதிகளவில் உற்பத்தி செய்யும் தன்மை இதற்கு உண்டு.
துளசி: மகாலெட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் இந்த செடி நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியதும் கூட.
சங்குபூ… வெண்மை, நீல நிறத்தில் பழைய கால கூம்புவடிவ மைக் சேப்பில் இருக்கும் சங்குப்பூ பார்க்கவே அழகாக இருக்கும். பிள்ளையார், சிவனுக்கும் இது ஏற்றது.
வாடாமல்லி: வீட்டில் நேர்மறை சிந்தனையை, சக்தியை அதிகரிக்கும் வாடாமல்லி வாடவே செய்யாது. அதேபோல் வீட்டில் இருப்பவர்களையும் வாட விடாது என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
கோழிக்கொண்டை பூச்செடி: வாடாத தன்மைக் கொண்ட இந்த பூவை மாலை தொடுப்பார்கள். இதுவும் வாஸ்துப்படி வீட்டில் இருப்பது நல்ல பலன் கொடுக்கும்.
பொன் அரளி: வீட்டில் செல்வத்தை பெருக்கும் பொன் அரளி மஞ்சள் நிறத்தில் பூக்கும். பார்ப்பதற்கு கொன்றை பூக்களைப் போலவே இருக்கும்.