நடிகர் விசுவின் மூன்று மகள்களா இது? எப்படி இருக்காங்க பாருங்க… இதுவரை யாரும் பார்த்திராத அறிய புகைப்படங்கள்..!

தமிழ்த்திரையுலகில் இயக்கம், நடிப்பு என இருத்துறையிலும் முத்திரைப் பதித்தவர் நடிகர் விசு. இவர் கடைசிகாலத்தில் பாஜகவில் சேர்ந்து, ஆர்.எஸ்.எஸ் மேடையிலும் பேசிவந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு, விசு சிறுநீரக பிரச்சினையால் காலமானார்.

நடிகர் விசுவைப் பொறுத்தவரை முதன்முதலில் கடந்த 1977 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் பட்டினப்பிரவேசம் என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மணல் கயிறு, நல்லவனுக்கு நல்லவன், அருணாச்சலம் உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் விசு தன் அடர்த்தியான வசனங்களால் கவனம் குவித்தவர். அவர் படத்தில் இடம்பெற்ற பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்குற பைத்திய வைத்தியருக்கே பைத்தியம் பிடிச்சா…அந்த பைத்திய வைத்தியர், எந்த பைத்திய வைத்தியரைப் போய் பார்ப்பாரு என்னும் வசனம் ரொம்பப் பேமஸ்.

இதேபோல் விசுவின் இயக்கத்தில் வந்த படங்கள் அத்தனையுமே குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய அளவிற்கு இருக்கும். கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான சம்சாரம் அது மின்சாரம் படம் தேசிய விருதும் பெற்றது. 1975 ஆம் ஆண்டு சுந்தரி என்பவரைத் திருமணம் செய்த விசுவுக்கு, லாவண்யா, சங்கீதா, கல்பனா என மூன்று மகள்கள் உள்ளனர். விசு படம் என்றாலே நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. அதேநேரத்தில் சன் டிவியில் அரட்டை அரங்கம், ஜெயா டிவியில் மக்கள் அரங்கம் என முக்கியமான சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளையும் விசு தொகுத்து வழங்கியுள்ளார்.

இப்போது இணையத்தில் முதன் முதலாக நடிகரும், இயக்குனருமான விசு தன் மனைவி, மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே விசுவின் மகள்களா இது? எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.

You may have missed