ஐப்பானியர்களுக்கு ஏன் தொப்பையே இல்லை தெரியுமா… அவர்களின் பிட்னஸ் சீக்ரெட் இதுதான்.. நீங்களும் பாலே செய்யுங்க…!
‘சுறுசுறுப்பு’ என்றது நம் அனைவரின் நினைவுக்கும் வருபவர்கள் ஐப்பானியர்கள் தான். அவர்களுக்கு தொப்பையே இருக்காது. அவர்களின் கடுமையான டயட்ம், வாழ்க்கை முறையும் அவர்களது தொப்பைக்கு குட்பை சொல்ல வைத்திருக்கிறது.
சரி..நமக்கும் கூட தொப்பை இல்லாத வாழ்க்கை பிடிக்கும் தானே? வாருங்கள் இதில் ஐப்பானியர்களின் பிட்னஸ் சூத்திரத்தை தெரிந்து கொள்ளலாம். ஐப்பானியர்கள் சோயாவை அதிகம் சாப்பிடுவார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 50 கிராம் சோயாவை பல உணவுகளிலும் எடுத்துக்கொள்வார்கள்.
அதேபோல் சாப்பாட்டுக்குப் பின் க்ரீன் டீ குடிக்கும் வழக்கமும் இவர்களுக்கு உண்டு. இதனால் இதயம் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள் இளமையுடனும் இருப்பார்கள். டயட் என்பது ஐப்பானியர்களிடம் எப்போதும் இருப்பது இல்லை. அனைத்து உணவுகளையும் சாப்பிடுவார்கள். ஆனால் எங்கே போனாலும் நடந்தே தான் செல்வார்கள். அது அவர்களது உடலை பிட் ஆக்கிவிடுகிறது. காலை உணவில் மிசோ சூப்பை சேர்த்துக் கொள்வார்கள். இதில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புரோபயோடிக்ஸ் அதிகம் உள்ளது.
ஐப்பானியர்கள் உணவை மெதுவாக சாப்பிடுவார்கள். இதனால் அவர்களது செரிமான மண்டலம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மிதமான சூட்டில் தான் ஐப்பானியர்கள் உணவைச் சமைப்பார்கள். இதனால் உணவில் இருக்கும் ஊட்டச்சத்தின் அளவு குறையாமல் இருக்கும். பெரும்பாலும் ஆலிவ் ஆயிலைத்தான் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக ஐப்பானியர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவது ரொம்பவும் அரிது. அவர்களின் பாரம்பர்ய உணவு வகையான க்ரில் மீன், அளவான சாதம், வேகவைத்த காய்கறிகள், ஒரு பெளல் மிசோ சூப் மற்றும் க்ரீன் டீ போன்றவைதான் மெயின் உணவு.
இப்படியெல்லாம் உணவுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால் ஐப்பானியர்களுக்கு தொப்பை என்பதே இல்லை.