அடிக்கடி கழுத்து, இடுப்பு, முதுகு, முழங்கால் வலி வருகின்றதா.. சுலபமாக நீக்கும் முன்னோர் மருத்துவம்… இதை குடிச்சாலே போதும்..

இன்று துரித உணவு என்னும் பெயரில் நம் பாரம்பர்ய உணவுகளை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். அதன் எதிரொலியாக கால்சியம் குறைபாட்டால் பலரும் அவதிப்படுகிறோம். கால்சியம் சத்து உடலில் குறைவதால் தான் கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகுவலி, முழங்கால் வலி என பல பிரச்னைகள் வருகின்றன.

தேவையாவவை:

25 கிராம் அளவுக்கு மாவு ஜவ்வரிசி, 50 கிராம் கேழ்வரகு

செய்முறை..

அடுப்பை ஆன்செய்து விட்டு மிதமான சூட்டில் கடாயில் வைத்து ஜவ்வரிசியை வறுக்க வேண்டும். அதை மூன்று நிமிடம் வறுக்கும் போது ஜவ்வரிசி வெடித்து பூபோல் வர ஆரம்பிக்கும்.

தொடர்ந்து அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இதனோடு கேழ்வரகை சேர்க்க வேண்டும். கேழ்வரகு சேர்த்ததும் இரண்டு நிமிடம் வறுத்துவிட்டு அடுப்பை அணைக்க வேண்டும். இதை நன்றாக ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இதை ஒரு மிக்ஸில் போட்டு அரைக்க வேண்டும். இது பொடிதாக இருக்க வேண்டும்.ஒருமுறை தயாரித்து வைத்ததை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்துவது?

இந்த மாவு மூன்று ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனோடு கொஞ்சம் பச்சைத்தண்ணீர் சேர்க்க வேண்டும். ஒரு கிளாஸ் அளவுக்கு பாலை அடுப்பில் சூடாக்க வேண்டும்.

அது கொதித்து வரும்போது, இந்த மாவு தண்ணீர் கலவையை ஊற்ற வேண்டும். நான்கு நிமிடங்கள் கழித்து இதோடு நாட்டுச் சர்க்கரை சேர்க்கலாம். அதன் பின்னர் அடுப்பில் இருந்து இதை இறக்கிவிட வேண்டும்.நாம் இப்போது இதில் சேர்த்திருக்கும் அனைத்திலுமே அதிக அளவுக்கு கால்சியம் சத்து இருக்கிறது.

மிதமான சூட்டில் குடித்தால் இது சுவையாகவும் இருக்கும். காலையில் பிரேக் பாஸ்டாகவோ, மாலையில் ஸ்னேக்ஸாகவோ இதை எடுத்துக்கலாம். இதை மட்டும் செய்தாலே கால்சியம் குறைபாட்டால் வரக் கூடிய இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்துவலி என சகலவலிகளையும் துரத்திவிடும்.

You may have missed