வாழ்க்கைத் தத்துவத்தை சில நொடியில் அனைவருக்கும் புரியவைத்த ஆடு… மெய்சிலிர்க்க வைக்கும் ஆட்டின் செயல்..!
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். முயன்றால் இந்த உலகில் முடியாதது எதுவுமே இல்லை. சாமானிய குடும்பத்தில் பிறந்து தங்களது விடாமுயற்சியால் வாழ்வில் உச்சநிலையை அடைந்த பலர் உண்டு.
17 முறை தோல்வியடைந்த கஜினி முகமது விடாமுயற்சியோடு போராடியதால் தான் 18வது முறை வெற்றி பெற்றார். அவரது விடாமுயற்சி அவருக்கு வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றுத்தந்தது. அந்தவகையில் மாணவர்கள் வாழ்வில் ஜெயிக்க விடாமுயற்சி அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதோ இப்போது அதை உணர்த்தும்வகையில் ஒரு அழகான சம்பவம் நடந்துள்ளது.
சென்னை வ.உ.சி தெருவில் தண்ணீர் லாரி வந்து நின்றது. அந்த லாரி அருகில் இருந்த மரத்தை ஒட்டி நிற்க, உயரத்தில் இருந்த அதன் இலையை சாப்பிட விரும்பிய ஆடு, ஓடியே வந்து லாரியின் முன்பக்கக் கண்ணாடி வழியாக மேலே ஏற முயன்றது. ஆனால் அதனால் ஏறமுடியாமல் நான்கைந்துமுறை சறுக்கிவிழ இருந்தும் மனம் தளராமல் ஓட்டப்பந்தயத்துக்குத் தயாராகும் மாவீரனைப் போல ஓடிப்போய் லாரியில் ஏறி கம்பீரமாக போஸ் கொடுத்தது.
இதை அந்தப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வீடியோவாக எடுக்க, அது இப்போது வைரல் ஆகிவருகிறது.