சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்து இருக்கும் இந்த சிறுவன் யார் என தெரிகிறதா…? பாலிவுட்டையே கலக்கும் டாப் நட்சத்திர நடிகர் தான்..!

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என ரஜினியின் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அது இப்போதும் ரஜினிக்கு பொருந்தும். இன்றும் ரசிகர்கள் மனதில் நிரந்தர சூப்பர் ஸ்டாராகவே உள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினி ஒரு பிரமாண்டமான வர்த்தகப் பொருள். 70 வயதிலும் அவருக்கான வேல்யூ அப்படியே இருப்பதுதான் அவரின் பலம்.கருப்பு, வெள்ளை காலம் எனப்படும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் தொடங்கி, கலர் படம் காலம் வரை திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கோச்சடையானில் அனிமிசேனாகவும் வந்தார். 2.0 திரைப்படத்தில் 2 டி தொழில்நிட்பத்திலும் நடித்தார். இத்தனை காலத்தையும் வேறு எந்த தென்னிந்திய நடிகர்களும் சாத்தியப்படுத்தியதில்லை. அந்த அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கும் சூப்ப்ர் ஸ்டாருக்கு மகனாக பிரபல நடிகர் ரித்திக் ரோஷன் நடித்துள்ளார்.

ரஜினி இந்தியிலும் சில படங்களில் நடித்திருந்தார். 1986ல் ரஜினி நடிப்பில் இந்தியில் உருவானப் படம் தான் பகவான் தாதா. இதில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். இந்தப்படத்தில் தான் இப்போது இந்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரித்திக் ரோஷன் சூப்பர் ஸ்டாரின் மகனாக நடித்துள்ளார். இந்தப்படம் இந்தியில் வந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது இந்தப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed