16 வயதிலே மிஸ் சென்னை பட்டம் பெற்ற நடிகை திரிஷா… அப்போது எப்படி இருந்திருக்காங்க பாருங்க…

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. நடிகர் பிரசாந்தின் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை திரிஷா. அந்த படத்தில் நடிகை சிம்பிரான்க்கு தோழியாக நடித்திருப்பார். இவர் அதன் பின்னர் பல படங்கள் நடித்திருந்தாலும். 2004ம் ஆண்டு தரணி இயக்கத்தில் இளையதளபதி விஜய் உடன் கதாநாயகியாக நடித்த கில்லி படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.

இவர் தன்னுடைய 25 ஆண்டுகள் சினிமா பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து முன்னணி கதாநாயகியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் கடந்த 2019ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த பேட்ட படம் வெளிவந்த பின்னர் ஒரு சில ஆண்டுகள் திரைப்படம் எதுவும் வெளிவராமல் இருந்தது.

சமீபத்தில் 2023 ம் ஆண்டு விஜயுடன் நடித்த லியோ படம் வெளிவந்தது.அதை தொடர்ந்து விஜயின் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும் தற்போது வெளிவர இருக்கும் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் கதா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் 2025ம் ஆண்டு அவருடைய நடிப்பில் 5 படங்கள் வெளிவர உள்ளன.

திரிஷா நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் செய்து கொண்டிருந்தார். மேலும் அவர் மிஸ் சென்னை பட்டமும் வென்றுள்ளார். அப்போது பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான தன்னுடைய போட்டோவை தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். யாரும் பார்த்திடாத இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரல் ஆகிவருகிறது. மேலும் 16 வயதில் இருந்த அதே அழகு இப்பொதும் இருக்கிறது என ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.