படப்பிடிப்பு முடிந்தது … ரெட்ட தல படக் குழுவினர்க்கு கறிவிருந்து போட்ட அருண்விஜய்…!!

70s நடிகர்களில் முக்கிய பங்கு வகித்தவர்களின் ஒருவரான விஜயகுமாரின் மகன் தான் அருண்விஜய். 1977ல் பிறந்த இவர் 1995ல் முறை மாப்பிளை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் .

அப்பாவின் மூலம் சினி துறையில் ஈசி ஆக நுழைந்தாலும், இவரின் படங்கள் அந்த அளவு வெற்றியை தரவில்லை. பின் ஜிம் எல்லாம் சென்று தனது பாடியை பிட் செய்து கொண்டு என்னை அறிந்தால் மூவியில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருந்தார். இப்படம் அருண்விஜய்-க்கு எதிர் பார்த்ததை விட பெரிய வெற்றியை கொடுத்தது எனலாம்.

இதனை தொடர்ந்து யானை மிஷன் போன்ற படங்கள் ரசிகர் மத்தியில் செம ஹிட் கொடுத்தது.

தற்போது இவர் சித்தி இத்னானியுடன் இணைந்து ரெட்ட தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தன்னுடைய படக்குழுவினருக்கு அருண் விஜய் அவர்கள் கறிவிருந்து போட்டுள்ளார்.

இதில் இயக்குனருக்கு பிரியாணி கொடுத்து கலாய்த்துள்ளார் ஹீரோயின் சித்தி. மேலும், இதை வீடியோ எடுத்து சித்தி இத்னானி வெளியுட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.