எதற்கு வம்பு…! மறந்தும் படுக்கையில் இருந்து சாப்டாதீர்கள்…! இத்தனை விளைவுகள் வருமாம்…!

ஒரு வீட்டில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவதே வாஸ்து தான். புதிதாக ஒரு வீடு துவங்குவதற்கு முன்பு வாஸ்து பார்த்து தான் வீடு வைப்பார்கள். அதிலும் முக்கியமாக இந்து மதத்தில் வாஸ்து அதிகமாக நம்புவார்கள். வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதத்தில் மனிதன் தோன்றிய காலம் முதலாக தொன்று தொட்டு பின்பற்றும் ஒன்றாக அமைந்துள்ளது. நமது முன்னோர்கள் கடைபிடித்த ஒன்றாகத்தான் வாஸ்து சாஸ்திரம் பார்க்கப்படுகிறது. காலம் காலமாக பின்பற்றப்படும் இந்த சாஸ்திர முறை அழகியல் ரீதியாக மட்டும் அல்ல வாழ்க்கையில் ஏற்படும் செழிப்பு ,வெற்றி, கஷ்டம், நஷ்டம் என அனைத்திற்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாம் அடிக்கடி செய்யும் தவறுகளில் ஒன்றான படுக்கையில் இருந்து உணவு சாப்பிடுவதை பற்றி வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

பொதுவாக வீடுகளில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும் எவ்வளவு உழைத்தாலும் பணம் கையில் தங்காது பண கஷ்டம் உடல் நலம் குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். இந்த மாதிரி நேரங்களில் வாஸ்துவினால் எதும் பிரச்சனைகள் ஏற்படுகிறதோ என்று வாஸ்துவை பார்க்கவேண்டும். அந்த வகையில் ஒரு சில வீடுகளில் உணவினை படுக்கையில் வைத்து சாப்பிட கூடிய பழக்கம் உண்டு. அது முற்றிலும் தவறான ஓன்று.

மேலும் வாஸ்து சாஸ்திரப்படியும் படுக்கையில் இருந்து சாப்பிடுவதால் லக்ஷ்மி தேவி கோவம் கொண்டு சாபம் இடும் நிலைமை ஏற்படும் எனவும் அதனால் வீட்டில் வறுமை ஏற்படும் எனவும் மேலும் பண கஷ்டம் மன கஷ்டம் ஏற்படும் எனவும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக உருவாகும் எனவும் கூறப்படுகிறது. படுக்கை என்பது உறங்குவதற்கான இடம் அதனால் அங்கு வைத்து சாப்பிடுவது நல்லதல்ல மேலும் உணவினை எப்பொழுதுமே உயர்ந்த இடத்தில் வைத்து அல்லது தரையில் அமர்ந்து சாப்பிடுவது தான் நல்லது சாப்பிடும் உணவிற்கு நாம் மரியாதை கொடுக்கவேண்டும் இவ்வாறு வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது எதற்கு வம்பு இனிமேல் படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவதை விட்டுவிடலாம்.

You may have missed