பட்டுப்புடவையை சுலபமான முறையில் எவ்வாறு பராமரிப்பது… பெண்களுக்கான டிப்ஸ் இதோ..!
பொதுவாகவே பெண்களுக்கு ஆடைகள் மற்றும் அணிகலன்கள் மீது ஆவல் அதிகமாக இருக்கும். அந்த வகையில் பெண்களுக்கு புடவைகள் என்றாலே மிகவும் இஷ்டம். அதிலும் பட்டு புடவை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் பட்டு புடவைகளை பராமரிப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். அதற்கான டிப்ஸ் இதோ. பட்டு புடவை காட்டினாலே பெண்கள் மிகவும் அழகான தோற்றத்தில் கட்டியளிப்பர். மிக அதிக அளவில் ரூபாய் கொடுத்து வாங்கும் பட்டுப்புடவையை பராமரிப்பதற்கு பெண்கள் மிகவும் சிரமபடுவார்கள். அதற்க்கான சுலபமான முறையில் டிப்ஸ் இதோ. பட்டு புடவையை துவைப்பதை விட அதனை ட்ரை வாஸ் செய்வதே மிகவும் சிறந்தது.
அதிலும் பட்டு புடவையை மடித்து வைத்த பின்னர் நீண்ட நாள் ஒரே மடிப்பில் வைக்கக்கூடாது. அடிக்கடி எடுத்து மடிப்பு மாற்றி மடித்து வைக்க வேண்டும். இல்லயென்றால் அவ்வாறே இருந்து புடவை மடிப்பில் இத்து விடும். மேலும் புடவையில் ஏதேனும் அழுக்கு படிந்தால் உடனே தண்ணீர் வைத்து துடைத்து எடுப்பது நல்லது. மேலும் எண்ணெய் போன்ற அதிக கறைகள் படிந்தால் பவுடர் இல்லையென்றால் திருநீர் வைத்து ஐந்து நிமிடம் கழித்து அதனை துடைத்து எடுத்தால் கரை போய்விடும். டூத் பேஸ்ட் மூலமாகவும் கரையை போக்கலாம். மேலும் எங்கும் வெளியில் சென்று விட்டு உடனே புடவையை மடித்து வைக்க கூடாது.
அதனை கொஞ்ச நேரம் நிழலில் விரித்து காய வைத்து விட்டு அதன் பின்னர் மடித்து வைப்பது நல்லது. மேலும் புடவையை துவைப்பது, ஷர்ப் பொடி போட்டு வாஸ் செய்வது அதுவெல்லாம் தவறு. அதற்க்கு பதிலாக தண்ணீரில் கழுவி எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். மேலும் வெயிலில் புடையையை காய வைக்க கூடாது. மேலும் வருட கணக்கில் புடவையை தண்ணீரில் நனைக்காமல் இருப்பது தவறு. மூன்று மாதத்திற்கு ஒருக்காவது நனைத்து எடுப்பது தான் நல்லது. மேலும் புடவையை அயர்ன் செய்யும் பொழுது புடவையை மாற்றி போட்டு அதன் மேல் மெல்லிய துணி ஒன்றினை விரித்து போட்டு அயர்ன் பண்ணுவதே சிறந்தது.