ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டம்.. அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகை டிஷ்கோ சாந்தி..!

தமிழ் சினிமாவில் 80’s காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை டிஷ்கோ ஷாந்தி. இவர் உதய கீதம் என்ற படத்தின் மூலமாகவே அறிமுகம் ஆனவர். மேலும் இவர் பழைய நடிகர் ஆனந்தின் மகள் ஆவார். தன்னுடைய தந்தை இறந்த பிறகு தன்னுடைய நடிப்பின் மூலமாக தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றியவர். 7 வயதில் இருந்து நடிக்க ஆரம்பித்தவர்.இவர் கவர்ச்சி நடிகையாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் பல படங்களில் கவர்ச்சி நடிகையாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தன்னுடைய கவர்ச்சி நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தவர். ராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடலில் மூலமாக தன்னுடைய நடனத்தின் திறமையை காட்டி மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றவர்.

மேலும் இவர் பல படங்களில் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மேலும் இவர் நடனத்தின் மூலமாக தன்னுடைய திறமையை காட்டினார். இந்த பாடலுக்கு பிறகு இவருக்கு சினிமாவில் பலவாய்ப்புகள் கிடைத்தது. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். மேலும் ஸ்ரீஹரி கல்லீரல் நோயால் உயிரிழந்தார்.

இதனால் மனைஉளைச்சலுக்கு ஆளான சாந்தி குடி பழக்கத்திற்கு அடிமை ஆனார். மேலும் இவர் தன்னுடைய கணவர் இறந்த அவரின் அக்கோவுன்டில் இருந்த பணத்தை தன்னுடைய வீட்டில் வேலை பார்த்தவர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் தன் பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் இடத்தினையும் வைத்துள்ளார். மேலும் இவர் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டதாகவும் கூறி உள்ளார். இந்த தகவல் அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed