என் வாழ்க்கையில் இந்த தீபாவளியை மட்டும் மறக்கவே முடியாது.. சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் கூறிய தகவல்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் வரும் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் இன்று வரை வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல்க்கு என்று ரசிகர்கள் அதிகம். இந்த சீரியல் கதை எதார்த்தமாக குடும்பங்களில் நடப்பதை போன்று இருக்கும். இந்த சீரியலில் ஹீரோவாக வெற்றி வசந்த் நடித்திருப்பர். அவருக்கு ஜோடியாக வருபவர் தான் நடிகை ஹோமதி பிரியா. வெற்றி வசந்த் இந்த சீரியலில் முத்து என்ற பெயரில் நடித்திருப்பார். இவர் சின்னத்திரையில் வருவதற்கு முன்பு டிக் டாக், யூடுபே போன்றவற்றில் வீடியோ போட்டு பிரபலம் ஆனவர்.

இவரின் யதார்த்தமான நடிப்பாழும் முக தோற்றத்தாலும் முத்து என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளார்.இவர் சமீபத்தில் தான் அவரது காதலி வைஷ்ணவி என்று அறிவித்தார். வைஷ்ணவி ராஜா ராணி 2 சீரியல் மூலமாக அறிமுகம் ஆனவர். தற்போது விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களில் நிச்சயதார்த்தம் சமீபத்தில் இரு வீட்டாரின் சம்மதத்தில் நடந்து முடிந்தது. மேலும் இவர்களில் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை குறித்து பேட்டி அளித்த வெற்றி வசந்த் என் வாழ்க்கையில் மறக்க முடிய தீபாவளி என்றால் நானும் என் அப்பாவும் சேர்ந்து கத்தி படம் ரிலீஸ் ஆனதை தியேட்டரில் சென்று பார்த்தது தான் என்று கூறி உள்ளார். இவருடைய அப்பா பண்டிகை நாள் அன்று எங்கும் போக கூடாது எல்லாரும் சேர்ந்தது வீட்டில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுவாராம். ஆனால் கத்தி படம் பார்ப்பதற்கு அப்பாவிடம் தயங்கி தயங்கி போய் கேட்டாராம் அவரின் அப்பா சம்மதித்து இருவரும் சென்று பாத்தார்களாம். இவ்வாறு வெற்றி வசந்த் கூறி உள்ளார்.

You may have missed