லட்சுமி சீரியலில் சஞ்சீவ் விலகியது குறித்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. சீரியல் தரப்பில் சொன்ன தகவல்கள் இதோ..!
சின்னத்திரையில் வரும் சீரியல்கள் தான் மக்களுக்கு முழுநேர பொழுது போக்காக உள்ளது. அதுவும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்கிற அளவிற்கு ஆகிறது. அதிலும் சில சீரியல்களில் வீட்டில் நடப்பதை அப்படியை திரையில் கட்டுவது போன்ற காட்சிகளும் வருகிறது. சீரியல் மட்டும் இல்ல சீரியலில் வரும் நடிகர்களும் இப்பொது மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளனர். அந்த வகையில் தற்போது சன் டிவியில் வரும் சீரியல்கள் தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. சன் டிவி சீரியல்கள் டிஆர் பி பட்டியலிலும் போட்டி போட்டு முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அந்த சீரியலில் சஞ்சீவ் ஹீரோவாகவும் சுருதி ராஜ் ஹீரோயினாகவும் நடித்து இருந்தனர். சஞ்சீவ் செல்வம் என்ற பெயரிலும் சுருதி ராஜ் மகா என்ற பெயரிலும் நடித்து வந்தனர். சீரியலில் இருவருக்கும் திருமணம் முடிந்தது மகா திருமணத்திற்கு பிறகும் தனது அம்மா தங்கையை பார்த்து கொள்ள உதவுகிறார். இது மகாவின் மாமியாருக்கு தெரிய வருகிறது. அதனால் விரிசல் ஏற்படுகிறது. இந்த மாதிரி குடும்பங்களில் ஏற்படும் கதையை மையமாக வைத்தும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் எடுக்கப்பட்ட சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் போது திடீரெனெ சஞ்சீவ் சீரியலில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாக மகராசி சீரியலில் நடித்த ஆர்யன் கமிட் ஆகி இருந்தார். சஞ்சீவ் விலகியது குறித்து சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் வெளிவந்தன. அது அனைத்தும் பொய் சஞ்ஜீவ்க்கு உடல் நலம் சாரியில்லை அதனால் தான் அவரால் வர முடியவில்லை. என்னால் சீரியல் பாதிக்க கூடாது எனக்கு பதிலாக வேற நபரை எடுங்கள் என்று சஞ்சீவ் கூறியதாக சீரியல் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.