வாவ்..சும்மா அசத்தலான சொகுசு கப்பலை வாங்கி இருக்கும் சீரியல் நடிகை ஆல்யா மானசா.. அதன் மதிப்பு இத்தனை கோடியா.. குவியும் வாழ்த்துக்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடர் மூலமாக பிரபலம் ஆனவர் தான் சீரியல் நடிகை ஆல்யா மானசா. அந்த தொடர் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். அந்த தொடரில் நடித்து கொண்டிருக்கும் பொது இவருக்கும் சஞ்சீவிக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு பையன் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக தற்போது இவர்கள் வலம் வருகிறார்கள்.

குழந்தைகள் பிறந்த பிறகு சீரியலில் நடிக்காமல் இருந்த இவர்  கொஞ்ச நாட்களுக்கு பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இனியா தொடரில் கதாநாயகியாக நடித்தார். அந்த தொடரிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சின்னத்திரையில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிக்கையில் ஐவரும் ஒருவர். மேலும் இவர் சமீபத்தில் பல கோடி மதிப்பில் சென்னையில் ஒரு வீடு கட்டி குடியேறினர். இப்படி எப்பொழுதும் பிஸியாக இருக்கும் இவர் தற்போது ஒரு புது தொழிலை தொடக்கி உள்ளார்.

அதாவது ரூ. 2 கோடி மதிப்புள்ள சொகுசு கப்பல் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளார். அதில் நவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறைகள், பிரம்மாண்ட டைனிங் ஹால், டிஜே என அனைத்து வசதிகளும் உள்ளனவாம். மேலும் தன்னுடைய புது தொழில் அடியெடுத்து வைக்கும் ஆல்யா அதனை கேரளா மாநிலம் ஆலப்புழாவில் தொடங்கியுள்ளார். மேலும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.    

You may have missed