கோலாகலமாக நடந்த சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த், வைஷ்ணவி திருமண வரவேற்பு.. வெளியானது அசத்தலான புகைப்படங்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் வரும் சீரியல்களில் ஒன்றான சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலம் ஆனவர் தான் வெற்றி வசந்த். இந்த சீரியல் இன்று வரை வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல்க்கு என்று ரசிகர்கள் அதிகம். வெற்றி வசந்த் இந்த சீரியலில் முத்து  என்ற பெயரில் நடித்திருப்பார். இவரின் யதார்த்தமான நடிப்பால்  முத்து  என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்றுள்ளார்.இவர் சமீபத்தில் தான் அவரது காதலி வைஷ்ணவி என்று அறிவித்தார்.

 வைஷ்ணவி ராஜா ராணி 2 சீரியல் மூலமாக அறிமுகம் ஆனவர். தற்போது விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களில் நிச்சயதார்த்தம்  இரு வீட்டாரின் சம்மதத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இவர்களின் திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்து முடிந்த்து.

மேலும் இதில் சின்னத்திரை பிரபலங்களும் கலந்து உள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நேற்று புதுக்கோட்டையில் வைத்து பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed