90’ஸ் களில் கலக்கிய நடிகை ரூபிணி தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரலாகும் புகைப்படங்கள்..!

90’ஸ் காலகட்டத்தில் கலக்கிய நடிகைகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரூபிணி. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு முதலில் ஹிந்தி படங்களில் நடித்தவர். இவர் தமிழில் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் ஆகியோருடன் நடித்துள்ளார். மேலும் இவர் பல வெற்றி படங்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இவர் நடித்த மனிதன், கூலிகாரன், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் மிகவும் ஹிட் படங்களாக உருவெடுத்தது. மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் மோகன் குமார் என்பவரை திருமணம் செய்தார்.

அதன் பின்னர் திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட இவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டார். இவருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் இவரின் தற்போதைய போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை ரூபிணியா இது இப்படி மாறிவிட்டார்களே என்று ஆச்சரியத்தில் பார்த்து வருகிறார்கள்.