அரிசி ஊற வைத்த தண்ணீரை வீணாக்காதீர்கள்.. அதில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா..!

நம்முடைய உணவு பழக்கத்தில் முக்கியமான ஓன்று தான் சாதம். அந்த சாதத்திற்கு பயன்படுத்தும் அரிசியினை கழுவி அந்த தண்ணீரை நாம் கீழே ஊற்றுவோம் அதில் இருக்கும் நன்மைகள் தெரியாமல். அரிசி கழுவும் தண்ணீரில் விட்டமின் பி 12 இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள், ஆண்டி ஆக்சிடெண்டுகள், தாதுக்கள், வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற பல சத்துக்கள் இருக்கின்றது. அதுமட்டும் அல்லாமல் அரிசி வடித்த தண்ணீர் நம்முடைய உடலுக்கும் மிகவும் ஆரோக்கியம் கொடுக்க கூடியது. நம்மை விட நம்முடைய அண்டை நாட்டவர்கள் இந்த அரிசி கழுவும் தண்ணீரை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கலாம். 

முகத்தில் உள்ள அழுக்குகள் சுத்தப்படுத்த மற்றும் முகத்தில் இருக்கும் துளைகளை அடைப்பதற்காக இந்த தண்ணீரை பயன்படுத்துகிறார்கள். அது மட்டும் அல்லாமல் முகம் வீங்கியது போன்று பொலிவற்றது இருப்பதையும் இது குறைக்குமாம். மேலும் முகத்திற்கு பேக் செய்து அப்ளை செய்யும் பொழுது முகம் பொலிவாகவும் மேலும் ஆயில் ஸ்கின் வறட்ச்சி அற்று இருப்பதும் குறையுமாம்.

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் முடி உதிர்தல் ஒரு பிரச்சனையாக இருக்கிறது அதற்கும் இது ஒரு நல்ல தீர்வாகவே இருக்குமாம். இதனை தலைக்கு தேய்ப்பதால் முடி உடைதல் மற்றும் காய்ந்து போகுதல் குறையுமாம். முடி பளபளப்பாக காணப்படுமாம். மேலும் முடியின் வறட்சி தன்மை குறையுமாம். மேலும் காய்கறிகள் நம்முடைய உடம்பிற்கு தேவையான அணைத்து வகையான விட்டமின் சத்துக்களையும் கொடுக்கிறது. அதனை வேகவைக்கும் பொழுது இந்த தண்ணீரை வைத்து வேக வைத்தால் மிகவும் சுவையாக இருக்குமாம் அதுமட்டும் அல்லாமல் அதிகளவில் ஊட்டச்சத்தும் கிடைக்குமாம்.