பாக்யலக்ஷ்மி சீரியல்க்கு Bye! Bye! சொன்ன பிரபலம்.. இதுதான் காரணமா.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஓன்று பாக்யலக்ஷ்மி. மருமகளின் முக்கியத்துவ கதையை கொண்டுள்ள இந்த சீரியலை அதிகளவில் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். டி ஆர் பி யில் எப்போதும் இடம் பிடிக்கும் இந்த சீரியல் ஒவ்வொரு வாரமும் விறு விறுப்பான கதை களத்தோடு தான் மக்களை சந்திக்க வரும். ஒவொரு குடும்பங்களில் நடங்கும் பிரச்சனைகளை வைத்து இயக்குனர் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார். மேலும் பெண்களின் முக்கியதுவம் குறித்தும் மேலும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதனை பெண்கள் எவ்வாறு கையாள வேண்டும் எனவும் மேலும் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் கதைக்களத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருப்பார்.

இந்த சீரியலில் பாக்கியாவிற்கு தோழியாக நடித்தவர் தான் ரேஷ்மா. இவர் ராதிகா என்ற பெயரில் நடித்திருப்பார். அதன் பிறகு பாக்கியாவிற்கு வில்லியாகும் அளவிற்கு வந்து விட்டார் என்றே சொல்லலாம். கோபி மீது உள்ள காதலால் பாக்கியவும் ராதிகாவும் பிரிந்தனர்.வில்லியாக நடித்திருந்தாலும் ரேஷ்மாக்கு என்று அதிகளவில் ரசிகர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர் இந்த சீரியலில் இருந்து விலக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமுக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ரேஷ்மா இது பற்றி எந்த விதமாக அதிகார பூர்வமான அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனால் விலகுகிறாரா என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

You may have missed