80’s களில் கலக்கிய நடிகை ரேவதி.. தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் 80′ s காலகட்டத்தில் மண்வாசனை என்ற படத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ரேவதி.  இவர் நடித்த முதல் படத்திலே இவருக்கு அதிகளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. மேலும் இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். வைதேகி காத்திருந்தாள், தேவர் மகன், கிழக்கு வாசல் போன்ற படங்கள் எல்லாம் இவர் நடிப்பில் மறக்க முடியாத படங்கள் என்றே சொல்லலாம். பல விருதுகளையும் பெற்றுள்ள இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிபடங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு என்று இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்லலாம். இவர் ஐந்து பிலிம் பேர் அவார்ட் வாங்கியுள்ளர். மேலும் இவர் அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த, கார்த்திக் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகையாக மட்டும் அல்லாமல் இயக்குனராகவும் மேலும் பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார்.

58 வயதான இவருடைய தற்போதைய போட்டோஸ் தான் இப்போ ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் அவர் நரைத்த முடியுடன் சிரித்த முகத்துடனும் இருக்கும் அவருடைய போட்டோஸ்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதற்க்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

pic5

You may have missed