சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. யோகி பாபுவுடன் கைகோர்த்து போட்டோஸ் எடுத்துக்கொண்ட நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் அல்டிமிஸ்டார் அஜித் குமார்.இவர்  தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைதிரி மூவீ மைக்கேர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரின் 63 வது படமாகும்.இந்த படத்தின் பஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளாகவே நடிகர் யோகி பாபுவை ஷூட்டிங் ஸ்பார்ட்ல்  வைத்து ஒரு நடிகர் என்னை தொடாதே என்று கூறியதாக வலைப்பேச்சு யூடுபே சேனல் மூலமாக சினிமா செய்திகளை வெளியிடும் அந்தணனும் பிஷ்மியும் கூறியிருந்தார்கள். அதுமட்டும் அல்லாமல் நடிகர் யோகி பாபு வலைப்பேச்சு யூடுபே சேனல் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக ஒரு குற்றசாட்டு வைத்திருந்தார். அதனை வலைப்பேச்சு யூடுபே சேனல் மறுத்தார்கள்.

அதுமட்டும் அல்லாமல் நடிகர் யோகி பாபுவை ஷூட்டிங் ஸ்பார்ட்ல்  வைத்து  என்னை தொடாதே என்று கூறிய நடிகர் வேறுயாருமில்லை நடிகர் அஜித் தான் என்று சொல்லியிருந்தார்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி கொடுக்கும் விதமாக நடிகர் அஜித் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து அவர் தோல் மீது கை போட்டு புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.