படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்.. இன்றைய விலை நிலவரம் குறித்த தகவல்கள்..!

பொதுவாகவே தங்கம் என்றால் அனைவருக்கும் ,மிகவும் விருப்பமான ஓன்று தான். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு அதிகம் என்றே சொல்லலாம். தங்கத்தின் விலை இப்போதெல்லாம் உச்சத்தை அடைந்த நிலையில் உள்ளது. இவ்வாறு தங்கத்தின் விலை தாறுமாறாக இருக்க இந்த மாதம் தொடங்கிய நாள் முதல் தங்கத்தில் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.

நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.135 குறைந்து ரூ.7,085 க்கும் ஒரு சவரன்க்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம்க்கு  ரூ.40 குறைந்து ரூ.7,045 க்கும் ஒரு சவரன்க்கு ரூ.320 குறைந்து ரூ.56,360 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம்க்கு  ரூ.30 குறைந்து ரூ.5,810 க்கும் ஒரு சவரன்க்கு ரூ.240 குறைந்து ரூ.46,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம்க்கு ரூ.1 கூடி ஒரு கிராம் ரூ.101 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.