வன்மத்தில் பேசிய ஜாக்லின்.. கடுப்பில் வெளியே சென்ற சத்யா.. பிக் பாஸ் ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில்  ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தமிழில் சீசன் 7 வரை நடிகர் கமலஹாசன் நடத்தி வந்தார்.அவர் திடீரென விலகியதால் தற்போது சீசன் 8 விஜய் சேதுபதி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய தொகுப்பாளர் பணியினை மிகவும் எதார்த்தமாக அருமையாக நடத்திக் கொண்டிருப்பதால் மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களாக தீபக், அர்னவ், ரஞ்சித், ரவீந்தர் சந்திர சேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால்,நான் முத்துக்குமரன்,சத்யா, அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுண்டன்,சார்சனா,  அன்ஷிதா, சுனிதா, RJ அனந்தி, ஜாக்லின், தர்ஷா குப்தா,   பவித்ரா, ஜனனி, என 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல் எலிமினேட் ஆக ரவீந்தர் வெளியேறி உள்ளார். இரண்டாவதாக அர்னாவ் எலிமினேட் ஆகி உள்ளார். மூன்றாவதாக தர்ஷா வெளியேறி உள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் புதிய ப்ரோமோ வெளிவந்துள்ளது. அதில் வன்மத்தை கக்குவது போன்று ஜாக்லின் பேசுகிறார். கடுப்பில் சத்யா வெளியே செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

You may have missed