இது பொம்மை அல்ல உண்மையான பெண்… அப்படியே மெழுகு பொம்மை போல் பெண்ணை மாற்றிய ஒப்பனையாளர்….

பொதுவாக பெண்கள் என்றாலே மேக்அப் செய்து கொள்வதில் தனி ஒரு ஆர்வம் காட்டி கொள்வார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதனாலே பெண்கள் சிறு வயதில் இருந்தே பார்பி டால் வைத்து விளையாடுவதை பழக்கமாக வைத்துள்ளனர்.

பெண்கள் சிம்பிள் மேக் அப் மற்றும் ப்ரைடல் மேக் அப் என தனித்தனியாக ரசிப்பார்கள். எல்லாவற்றையும் விட பொம்மை போன்று இருக்க வேண்டும் என பெண்கள் அனைவரும் ஆசை படுவது இயல்புதான். அந்த பார்பி டால் போலவே நம்மை ஒரு ஆள் அலங்கரித்து விட்டால் யாருக்கு தான் பிடிக்காது.

அதே மாதிரி தான் இங்கே ஒரு மேக் அப் கலைஞர் ஒரு பெண்ணை தயார் செய்து உள்ளார். முதலில் இதை பார்ப்பவர்கள் அனைவரும் பொம்மை என்று நினைக்கும் வகையில் அவரது திறமையை அழகாக காட்டியிருப்பார். பின் அந்த பெண் அசையும்போது மட்டுமே இது பொம்மை அல்ல பெண் என தெரியும். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.

You may have missed