விஜே விஷாலுக்கு காதல் திருமணமா…? மணப்பெண் யார் தெரியுமா…? இணையத்தில் கசிந்த தகவல்…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஓன்று பாக்யலக்ஷ்மி. மருமகளின் முக்கியத்துவ கதையை கொண்டுள்ள இந்த சீரியலை அதிகளவில் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் பாக்கியாவிற்கு மகனாக நடித்தவர் தான் விஜே விஷால். இவர் அந்த சீரியலில் எழில் என்ற பெயரில் அம்மா மீது அதிக அளவில் பாசம் உள்ள மகனாக நடித்திருந்தார். இவர் சமீபத்தில் அந்த சீரியலை விட்டு விலகினார். இவர் தற்போது பிக் பாஸ் சீசன் 8 ல் போட்டியாளராக களம் இறங்கி பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார் .

இந்நிலையில் இவரை பற்றிய சுவாரசியமான தகவல் ஓன்று வெளியாகி உள்ளது. அதாவது அவர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அவருடைய மருமகள் வேற யாரும் இல்லை பாக்கியாவிற்கு மருமகளாக வரும் அமிர்தா என்கிற அக்ஷிதா எனவும் இருவரும் பாக்யலக்ஷ்மி சீரியலில் கணவன் மனைவியாக நடிக்கும் பொழுது இருவருக்கும் இடையில் புரிதல் ஏற்பட்டு இருவருக்கும் ஒருவரை ஒருவருக்கு பிடிக்க இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து விஜே விஷால் வெளியில் வந்த பிறகு இருவருக்கும் திருமணம் நடக்கும் எனவும் அதற்குள் பாக்யலக்ஷ்மி சீரியல் முடிவடைந்து விடும் எனவும் உத்தேசமான தகவல்கள் வெளிவந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

You may have missed