விஜய் படம் பார்க்க சென்ற பொது தியேட்டரில் குட்டி தூக்கம் போட்ட அதிதி பாலன்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இவருடைய படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இவருடைய படத்தினை பார்க்க சென்ற நடிகை அதிதி பாலன் தியேட்டரில் வைத்து தூங்கினாராம்.அருவி படம் மூலமாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் நடிகை அதிதி பாலன்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் அதிகளவில் வாய்ப்பு கிடைக்காததல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து கொண்டிருந்தார். சமீபத்தில் தெலுங்கில் பிரபல நடிகரான நானியின் படமான சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் அக்கா கதா பாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றினை குடுத்திருந்தார்.

அதில் பேசிய அதிதி பாலன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து இளையதளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தினை பார்க்க சென்டிருந்தாராம். படம் தொடங்கிய கால் மணி நேரத்திலேயே படம் போகிற போக்கு பிடிக்காமல் தூங்கி விட்டாராம். அதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து வைத்து கலாய்த்து வந்தார்களாம். இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.