கேலி செய்த போட்டியாளர்கள்… மனம் நொந்து கண் கலங்கிய தர்ஷா குப்தா…BB8 ப்ரோமோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. . தற்போது பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தினமும் என்ன என்ன டாஸ்க் இருக்கும் என்பதை பார்பதற்கே மக்கள் விறுவிறுப்பாக இருப்பார்கள்.

இந்நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து விளங்கும் இந்த நிகழ்ச்சியில் நேற்று தர்ஷா குப்தா சமையல் செய்தது தான் பெரிதளவில் பேசப்பட்டது. அதாவது அவர் சமைத்ததில் கொஞ்சம் காரம் அதிகமாக சேர்த்து விட்டாராம். இதனால் அங்கு பலருக்கு வாந்தி பேதி என ஏற்பட்டுள்ளது. இதனால் ஜாக்ளின், முத்து குமரன், ஜெப்ரி, சுனிதா உள்ளிட்டோர் அவரை கலாய்த்தும் பேசி இருந்தனர்.

இதனால் மனம் உடைந்த தர்ஷா குப்தா சாப்பாடு விசியத்தில் அனைவரும் தன்னை கலாய்ப்பதாகவும் தான் அதனை தெரியாமல் தானே செய்தேன் எனவும் ஆண்கள் தான் கலாய்க்கிறார்கள் என்றால் பெண்களின் தங்களுக்குள் பேசி என்னை கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். தான் இவ்வளவு நாட்கள் குத் விக் கோமாளியில் இருந்துள்ளேன். அப்போது மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பபார்கள் எனவும் மனம் நொந்து கண் கலங்கி பேசி உள்ளார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது.