இன்று கீர்த்தி சுரேஷ் பர்த்டேக்கு சூப்பர் கிப்ட்…ரிவால்வர் ரீட்டா படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், சூர்யா,சிவகார்த்திகேயன்,விஷால்,விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் இவர் சிவகார்த்திகேயன் உடன் நடித்த ரஜினி முருகன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார். மேலும் அந்த படத்தினை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. .அதனை தொடர்ந்து அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்தது. இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார்.


சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்து வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்ப்பினை பெற்று ரூபாய்.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த மாமன்னன் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் அவர் நடித்து சமீபத்தில் வெளியான ரகு தாத்தா திரைப்படமும் நல்ல வரவேற்ப்பினை பெற்றது. இந்நிலையில் தற்போது பாலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தை கொண்டு சென்றுள்ள கீர்த்தி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் என்னும் படத்தில் வருண் தவான் நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.


இந்நிலையில் கதாநாயகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுக்கும் படம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இயக்குனர் சந்துரு இயக்கத்தில் ரிவால்வர் ரீட்டா என்ற படத்தினை நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் டீசர் கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளான இன்று வெளிவர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் இந்த படமும் கீர்த்திக்கு நல்ல ஒரு வரவேற்ப்பினை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அவரது ரசிகர்கள் இந்த படத்தினை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.