சந்திரமுகி படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்த சொர்ணாவா இது… ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே…!

தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடித்த படங்கள் பல சூப்பர் ஹிட் படங்கள் தான். இருப்பினும் சில படங்கள் டாப் டென் வரிசையில் அமைந்தது போல மெகா ஹிட் அடித்திருக்கும். அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் சந்திரமுகி. இந்த படம் வசூல் ரீதியாகவும் சரி கதை ரீதியாகவும் சரி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் அனைவருமே தங்களுடைய நடிப்பை அற்புதமாக கச்சிதமாக நடித்திருப்பார்கள். அந்த வகையில் காமெடி மன்னன் வடிவேலுக்கு மனைவியாக நடித்தவர் தான் நடிகை சொர்ணா மேத்யூ. இவர் சொர்ணா என்ற பெயரில் வடிவேலுக்கு மனைவி என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருப்பார்.

இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் சினிமாவில் தாய் மனசு என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார். அதன் பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்.

இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும். தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து பலர் சந்திரமுகி சொர்ணாவா இது என ஆச்சரியமாக கேட்டு வருகிறார்கள்.

You may have missed