சும்மா தூள்கிளப்புறாங்க ஸ்ருதிகா…ஹிந்தி பிக் பாஸ்ஸையே தமிழில் பேசவைத்து விட்டார்…! என்ன பேசுறாங்க பாருங்க…!

சின்னத்திரையில் முக்கியமான நிகழ்ச்சியில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக் பாஸ். இதெற்கென்று இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது ஹிந்தியில் 18 வது சீசன்னும் தமிழ் மற்றும் தெலுங்கில் 8 வது சீசன்னும் நடந்துகொண்டிருக்கிறது. ஹிந்தியில் தொகுப்பாளராக நடிகர் சல்மான்கான் நடத்திவருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பாலிவூடில் இருந்த வரவேற்பு காரணமாகத்தான் மற்ற மொழிகளிலும் தொடங்கப்பட்டது.

பிரபல நடிகையும் குத் விக் கோமாளி சீசன் வெற்றியாளருமான ஸ்ருதிகா ராஜ் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18ல் கலந்து கொண்டார். மேலும் இவர் சீசன் 18 ல் கலந்து கொண்டு பாலிவூட் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் தற்போது இவரின் உண்மை குணங்களை தெரிந்து கொண்டு ரசிகர்களும் இவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்நிலையில் வார இறுதியில் ஹிந்தி பிக் பாஸ் ஆன சல்மான்கான் வரை இவரை கலாய்த்து வருவார். இந்நிலையில் ஸ்ருதிகாவின் கணவர் அர்ஜுன் காங்காங் சென்று விட்டதாகவும் அனைவரும் அவரை ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஸ்ருதிகா தன்னுடைய கணவருக்கு மிரட்டல் விடுவது போன்று தமிழில் பேசியுள்ளார். அதனை பார்த்த ஹிந்தி பிக் பாஸ் அவரும் தமிழில் அதனை பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழில் ஹிந்தி பிக் பாஸ் பேசுவது இது தான் முதல் முறை என்பதால் அனைவரும் ஸ்ருதிகாவை ஹிந்தி பிக் பாஸ் தமிழில் பேசவைத்துவிட்டார் என்று பாராட்டி வருகிறார்கள்.

You may have missed