வெகு விமர்சையாக நடந்து முடிந்த நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம்… ஆனந்தத்தில் குடும்பத்தினர்..!
80’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் தன்னுடைய நடிப்பின் மூலமாக நீங்காத இடம் பிடித்தவர். முதலில் வில்லனாக நடித்த இவர் அதன் பிறகு தான் கதாநாயகனாக ஆரம்பித்தார்.மேலும் இவர் அரசியலிலும் தன்னுடைய பங்கை வெளிக்காட்டி உள்ளார். மேலும் இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் தான் தனுஷ். அவருக்கு சிறுவயதில் இருந்தே தசை சிதைவு என்ற நோய் இருக்கிறது.
தன் மகனுக்கு திருமணம் செய்யவேண்டும் என ஆசைப்பட்ட நெப்போலியன் அதற்காக பெண் பார்த்து சமீபத்தில் மகனில் நிச்சயதார்தத்தையும் நடத்தி முடித்தார். மேலும் திருமண சடங்குகள் அனைத்தும் நடந்து முடிந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு பந்த கால் நடும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதில் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும் தான் கலந்து கொண்டார்கள். இந்நிலயில் இவர்களின் திருமணம் ஜப்பானில் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். தடபுடலாக நடந்து முடிந்த தனுஷ் மற்றும் அக்ஷயா ஜோடி திருமணத்தை பார்த்து தனுஷின் தந்தை நடிகர் நெப்போலியன் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். திருமணம் நடந்து முடிந்த போட்டோஸ்கள் மற்றும் வீடியோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பலர் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை கூறியும் வருகிறார்கள்.