அக்ஷயாவிற்கு First கிப்ட் Best கிப்ட் ஆக கொடுத்த தனுஷ்.. மகளை குறித்து எமோஷனலாக பேசிய தாய்..!

80’s காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்த நடிகர் நெப்போலியனின்  முதல் மகன் தான் தனுஷ். அவருக்கு சிறுவயதில் இருந்தே தசை சிதைவு என்ற நோய் இருக்கிறது. தன் மகனுக்கு திருமணம் செய்யவேண்டும் என ஆசைப்பட்ட நெப்போலியன் அதற்காக பெண் பார்த்து திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த  பட்டதாரி பெண் அக்ஷயாவை திருமணம் செய்து வைக்கலாம் என முடிவெடுத்து சமீபத்தில்  இவர்களின் திருமணம் ஜப்பானில்  பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்தை பலரும் விமர்சித்துட்டு வரர்கள்.

அது மட்டும் இல்லாமல் அக்ஷயாவின் வீட்டில் பணத்திற்க்காக தான் இந்த திருமணத்திற்கு  சம்மதித்து உள்ளதாகவும் பேசினார். இது குறித்து மனம் திறந்து பேசிய அக்ஷயாவின் அம்மா அப்பா. அவர்கள் கூறுகையில் எனது மகளை யாரும் தப்பாக பேசாதீர்கள் இந்த சம்மந்தம் 3 வருடங்களாக வந்து இருக்கிறது. எனது மகள் சம்மதம்  தெரிவித்த பிறகு பிறகு தான் திருமணத்திற்கு ஒத்துக்கிட்டோம்.

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஒரு மாதம் நாங்கள் யாரும் வெளியில் வரவில்லை என்று கூறியுள்ளார்.  மேலும்  திருமணம் என்பது உடல் சார்ந்த விசியம் அல்ல அது மனம் சார்ந்த விசியம் எனவும் மேலும் தனுஷ் அக்ஷயாவிற்கு முதலில் கொடுத்த பரிசு மொபைல் போன் எனவும் மகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

You may have missed