4 வது திருமண நாளுக்கு கணவருக்கு கியூட் ஆக வாழ்த்து சொன்ன சைத்ரா ரெட்டி.. வைரலாகும் அழகிய பதிவுகள்..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலமாக அறிமுகம் ஆனவர் சைத்ரா ரெட்டி. இந்த சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதா பாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த சீரியல் இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பாக அவருடைய கரியரில் இருந்ததாகவே சொல்லலாம்.
அதன் பிறகு தற்போது சன் டிவியில் டாப் சீரியலாக இருக்கும் கயல் சீரியல்லில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தன்னுடைய நடிப்பு திறமையால் இந்த சீரியல் மூலமாகவும் அதிகளவு ரசிகர்களை உருவாக்கி உள்ளார் என்றே சொல்லலாம். இவர் ராகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தற்போது அவர்களின் திருமண நாளை முன்னிட்டு அவருடைய கணவருக்கு ஒரு அழகான பதிவினை போட்டுள்ளார். அவரும் அவருடைய கணவரும் எடுத்து கொண்ட புகை படங்களை அதில் பதிவிட்டுள்ளார். மேலும் அவருடைய கணவருக்கு 4 வது திருமண நாள் வாழ்த்தையும் கூறியுள்ளார். அவரின் அந்த பதிவு தற்போது வைரலாகிட்டு வருகிறது. மேலும் பலரும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்து குறிவருகிறார்கள்.