சிறு வயதில் அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம்.. ஏ.ஆர்.ரகுமானா இது.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!
சினிமாவில் தன்னுடைய இசை பயணத்தால் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு இசைப்பயணத்தை தொடங்கினார் இவர் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் இசை பயணத்தை தொடங்கிய நாள் முதல் இன்று வரை வெற்றி பயணத்தில் செல்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையலாம் என அணைத்து மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார் . இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி சாராக்கும் திருமணம் நடந்து 29 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறு வயதில் அவரின் தாயாருடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஆளே அடையாளம் தெரியவில்லை. ஏ.ஆர்.ரகுமானா இது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.