குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வேர்க்கடலை.. கட்டாயம் சாப்பிடுங்க ஏன் தெரியுமா..!

நமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் எளிதில் கிடைக்க கூடிய ஒரு பொருள் தான் வேர்க்கடலை.இது ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல நன் மைகளும் இதில் அடங்கி உள்ளது. மேலும் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் குளிரை தாங்கும் சக்தி கிடைக்கிறது. குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கிறன. என்ன என்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.

குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் சோர்வு, மந்தம் குறைந்து உடல் ஆற்றல் ஏற்படும். மேலும் இதில் இருக்கும் நல்ல கொழுப்பு மற்றும் புரதம் குளிரை தாங்கும் சக்தியினை தருகிறது. மேலும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. மேலும் வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சு கொழுப்புகள் இதயத்திற்கு மிகவும் நல்லது.

 மேலும் இதில் இருக்கும் ரெஸ்வெரட்ரோல் ஆக்சிஜனேற்றங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் விட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் சத்துக்கள் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரித்து குளிர் நேரத்தில் சளி, காய்ச்சல் வருவதை தடுக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரித்து மலசிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் நரம்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது, மேலும் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. மேலும் இதனை   50 அல்லது 100 கிராம் அளவில் எடுத்துக்கொள்ள்ளலாம்.

You may have missed