இரவில் பால் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்.. யாரெல்லாம் குடிக்கலாம் தெரியுமா..!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இன்றய காலகட்டத்தில் இரவு நேரங்களில் பால் குடிப்பதை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு டம்ளர் பால் குடித்தால் மட்டும் தான் தூக்கம் வரும் என்று சிலர் சொல்ல கேட்டிருப்போம். பாலில் அதிகளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இதனை பலரும் விரும்பி குடிக்கின்றனர். இது அணைத்து வயதினருக்கும் ஏற்ற ஓன்று தானா என்று கேட்டால் அதனை பற்றி யாருக்கும் பெரிதளவில் தெரியவில்லை என்றே சொல்லலாம். மேலும் மருத்துவ ரீதியாக பார்த்தால் சிறுகுடலில் இருக்கும் லக்டோஸ் என்சைம் பாலில் இருக்கும் லாக்டோஸ் மற்றும் குளுகோசை பிரித்தெடுக்கும்.
அப்படி பிரித்தெடுக்கும் பொழுது லாக்டிக் அமிலத்தை நம்முடைய உடல் உரிந்து கொள்ளும். பொதுவாக சிறு குழந்தைகளுக்கு அதாவது 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு லக்டீஸ் அமிலம் அதிகளவில் இருக்கும். அதனால் அவர்கள் குடிக்கும் பால் உடனே செரிமானம் ஆகி விடுகிறது. அனால் 30 வயதை கடந்த பிறகு இந்த என்சைமின் உற்பத்தி குறித்து விடுகிறது. அதனால் இரவு நேரத்தில் பால் குடித்தால் எளிதில் செரிமானம் ஆகாது.
அதுமட்டும் அல்லாமல் பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் இந்த பாலை உறிந்து கொள்ளும். இதனால் வயிறு உப்பிசம், வாய்வு தொல்லை, அசிட்டிட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இரவில் பால் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் படுக்கைக்கு செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக பால் குடிப்பதை மேற்கொண்டால் செரிமான பிரச்சனையை தவிர்த்து விடலாம்.