சினிமா நடிகைகள் இடையே அதிகரித்து வரும் விவாகரத்து.. காரணம் இதுதான்.. ஓப்பனாக கூறிய லேடி சூப்பர் ஸ்டார்..!
தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை விஜயசாந்தி. இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மேலும் இவரை தமிழ் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்றே கூறுவார்கள். இன்றளவும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். அது மட்டும் அல்லாமல் அதனின், நெற்றிக்கண், ரெட்டி பாரதம், அக்னி பர்வதர்ஜம், சீனா நாயுடு, மன்னன் ராஜஸ்தான் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய ஒரே நடிகையும் இவர் தான். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பில் மட்டும் அல்லாமல் அரசியலிலும் திகழ்ந்து விளங்கினார். மேலும் அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். மேலும் இவருடைய நடிப்பிறக்கி ஆந்திரா மாநிலத்தில் நந்தி விருதுகள், தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். இன்று வரையும் இவருடைய ஆக்ஷன் நடிப்புகள் பாராட்டப்பட்டு வருகிறது. .இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு சமீபத்தில் பேட்டி அளித்த இவர் எனக்கு அம்மா அப்பா இருவருமே இல்லை. என்னுடைய வாழ்வில் எல்லா முடிவுகளையும் நான் தான் எடுக்க வேண்டி இருந்தது.
என் கணவரை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்தேன். அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி அவர் எனக்கு துணையாக இருந்தார். இப்பொழுது மகிழ்ச்சியாக உளேன் எனவும் மேலும் இன்றய காலகட்டத்தில் சினிமா நடிகைகள் விவாகரத்து வாங்குவது அதிகரித்து வருகிறது. அது குடும்ப வாழ்க்கையில் ஈகோ பார்ப்பதால் தான். ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து வாழவேண்டும். கணவன், மனைவி இடையே புரிதல் வேண்டும் என வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.