பொங்கலுக்கு மாஸாக என்ட்ரி கொடுக்கும் 4 திரைப்படங்கள்.. எந்த படம் ஹிட் அடிக்கும்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
பொதுவாகவே தீபாவளி, பொங்கல் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். காரணம் அஜித், விஜய், ரஜினி, கமல், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும். அதனை எதிர்பார்த்து காத்து இருக்கும் ரசிகர்களோ ஏராளம். அந்த வகையில் வரும் 2025 ம் ஆண்டு பொங்கலுக்கு 4 திரைப்படங்கள் வெளிவர உள்ளன. எந்த படங்கள் என்று பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் வெளிவரும் குட் பேட் அக்லி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைதிரி மூவீ மைக்கேர்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள படம் தான் குட் பேட் அக்லி.இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
நடிகர் பிரசன்னாவும் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான விக்ரம் நடிப்பில் வெளிவரும் படம் தான் வீர தீர சூரன். மேலும் இந்த படத்திலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் மதுரையை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஒரு ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.
தெலுங்கில் டாப் ஹீரோவான ராம் சரண். அவர் தற்போது தமிழிலும் அதிகளவில் படங்கள் நடித்துள்ளார். அவருக்கும் ரசிகர்கள் அதிகமா தமிழில் உள்ளனர். அவர் நடிப்பில் வெளிவரும் படம் தான் கேம் சேஞ்சர். இயக்குனர் சங்கள் இயக்கத்தில் ராம்சரண், எஸ்,ஜே,சூர்யா, சமுத்திரக்கனி, கியாரா அத்வனி, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ள படம் தான் கேம் சேஞ்சர். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளிவருகிறது. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள படம் தான் வணங்கான். இந்த படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்தார் அவருக்கு ஏதோ பிடிக்காமல் விலகிவிட்டார். இந்த படத்தில் வாய் பேச முடியாமல், காது கேட்காமல் நடித்திருப்பார் அருண் விஜய். இந்த படத்தையும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். 4 படங்களில் எந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.