அச்சு அசலாக இசையமைப்பாளர் அனிரூத் சாயலில் இருக்கும் ஒரு நபர்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 என்ற படத்தில் இசையமைத்ததன் மூலமாக அறிமுகம் ஆனவர் இசையமைப்பாளர் அனிருத். இவருடைய முதல் பாடலான வொய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது. முதல் பாடலே இவருக்கு வெற்றி பாடலாக அமைந்தது. அதை தொடர்ந்து பல படங்களில் இசையமைத்துள்ளார். இவருடைய பாடல்கள் என்றாலே வெற்றி பாடல்கள் என்றே சொல்லலாம். முன்னனி இசையமைப்பாளர்கள் பட்டியலில் ஐவரும் தற்போது வலம் வருகிறார் என்றே சொல்லலாம்.

மேலும் எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் வரிசையில் தற்போது அனிருத்தும் இடம் பிடித்து விட்டார். இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். மேலும் இவர் ,முன்னணி நட்சத்திரங்களான அஜித், விஜய், ரஜினி, கமல் படங்களில் அனிருத் இசை தான் இப்போதெல்லாம். மேலும் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி முதல் 12 கோடி வரை வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.

அதாவது உலகத்துல ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்களாம். அப்படி பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். பிரபல நடிகர் நடிகை மாதிரி அவங்களோட சாயலில் மேக்கப் போட்டு யாரும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.அனால் இந்த நபரோ மேக்கப் எதுவுமே இல்லாமல் அச்சு அசலாக அனிரூத்  சாயலில் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அனிரூத்தா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த நபர் உள்ளார். அவருடைய அந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.