திருமணத்திற்கு தயாராகும் நடிகை கீர்த்தி சுரேஷின் அசத்தல் ஸ்டில்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகம் ஆனார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்துள்ளார். ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி 2, அண்ணாத்த, சர்கார், சண்டக்கோழி 2 என இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்தது. இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார்.
மேலும் பாலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தை கொண்டு சென்றுள்ள கீர்த்தி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. தற்போது இவர் கைவசம் ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன . அதனை கீர்த்தியும் உறுதி செய்தார். அடுத்த மாதம் கோவாவில் வைத்து இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ட்ரெண்டிங் உடையில் ஜொலிக்கும் போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.