சீரியல் நடிகர் நேத்ரன் மறைவதற்கு முன்பு இறுதியாக வெளியிட்ட பதிவு.. கலக்கத்தில் ரசிகர்கள்..!
சீரியலில் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருந்தவர். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிற பொன்னி, முத்தழகு, பாக்யலக்ஷ்மி சீரியலில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் என்றெ சொல்லலாம். இவரும் இவரது மனைவி தீபாவும் சீரியலில் நடிக்கும் பொழுதே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவரது மனவிவி தீபா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிங்கப்பெண்ணெ சீரியலில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் அபிநயா. அவர் கனா காணும் காலங்களில் நடித்துள்ளார். இரண்டாவது மகள் அஞ்சனா. அவர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் அஞ்சனாவும் நேத்திரனும் சேர்ந்து பாய்ஸ் அஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் நேத்திரன் புற்று நோய் காரணமாக நேற்று இரவு காலமானார். இவருக்கு நுரையீரல் புற்றுநோய். இவர் கடந்த 6 மாதங்களாக சிகிக்சை பெற்று வருகிறார். நேற்று உடல் நலம் சரியில்லாத இவர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு திரையுலகம் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் இறுதியாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவரது இரண்டாவது மகள் அஞ்சனா ஆசையாக செய்த கோதுமை பிஸ்கட்டை ரசிகர்களுக்கு சந்தோசமாக பகிர்ந்துள்ளார்.தற்போது இவரின் இந்த பதிவை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு இவ்வாறு நடந்திருக்க கூடாது. இவரது குடும்பம் இதை எப்படி தாங்கி கொள்ளும் என்று சோகத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.