புதிய லுக்கில் கலக்கும் மதராசப்பட்டினம் படத்தின் கதாநாயகி எமி ஜாக்சன்.. வெளியான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகை எமி ஜாக்சன். இந்த படத்தில் நடிகர் ஆர்யாக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் அவரது முதல் படத்திலே கச்சிதமாக நடித்திருப்பார். முதல் படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். இந்த படத்தினை தொடர்ந்து தாண்டவம், கெத்து, ஐ, தெறி, தங்கமகன் போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் என்றே சொல்லலாம். திடீரெனெ இவரை படங்களில் காண்பது இயலாத ஒன்றாக இருந்தது.

 மேலும் இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். இவர் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் மறுபடியும் கர்ப்பமாக உள்ளார். அதன் புகைப்படங்களை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் புதிய ஹேர் ஸ்டைல் உடன் புதிய லுக்கில் இருக்கும் புகைபடத்தை அவரது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எமியா இது என்று ஆச்சரியத்தில் பார்த்து வருகிறார்கள். தற்போது இவரது புதிய லுக் போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed