இலங்கை தமிழர்களாக கலக்கும் சசிகுமார் மற்றும் சிம்ரன்.. வெளியானது டூரிஸ்ட் பேமிலி படத்தின் டைட்டில் டீசர்..!

சுப்ரமணியபுரம் என்னும் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறிமுகம் ஆனவர் தான் நடிகர் சசிகுமார்.  வித் திசயசமான கதைக்களத்தை வைத்து படம் எடுப்பதில் இவர் வல்லவர். முதல் படத்திலே  வித்தியாசமான கதையை மையமாக எடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் அதனை தொடர்ந்து நாடோடிகள், தாரை தப்பட்டை, சுந்தர பாண்டியன், வெற்றிவேல், அயோத்தி போன்ற படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த கருடன் மற்றும் நந்தன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் தற்போது இலங்கை தமிழராக   நடித்துள்ள படம் தான் டூரிஸ்ட் பேமிலி.  இந்த படத்தில் 90 ஸ் பேவரைட் கதாநாயகி சிம்ரன் நடித்துள்ளார். இவருக்கு என்று இன்றளவும் ரசிகர்கள் அதிகம்.

பல வெற்றி படங்களை கொடுத்த இவர் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.

You may have missed