சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் வெளியாகும் மழையில் நனைகிறேன் படம்.. வாழ்த்துக்கள் தெரிவித்த சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமாவில் ரெமோ, சோலோ, 90 எம் எல், தம்பி போன்ற படங்களில் நடித்தவர் தான் நடிகர் அன்சன் பால். இவர் மலையாள நடிகர் ஆவார். மேலும் இவர் தற்போது தமிழில் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் மழையில் நனைகிறேன். இந்த படத்தினை ராஜேஷ் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரெபா ஜான், மேத்தியூ வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

இந்த படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியானது. இந்த படம் தொடங்கும் போதும் முடியும் போதும் மழை பெய்றது போன்று எடுக்கப்பட்டதால் இந்த படத்திற்கு மழையில் நனைகிறேன் என்று பெயர் வைத்துள்ளார்கள்.  மேலும் இந்த படம் வருகிற 12 ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் இப்படத்தின்  தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் ரஜினிக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இப்படம் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதில் இப்படம் பெரும் வெற்றி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். தற்போது ரஜினிகாந்த பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

You may have missed