விடுதலை 2 படத்தின் பின்னணி இசை பணிகளை முடித்தார் இசையமைப்பாளர் இளையராஜா.. நன்றி தெரிவித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரின்  நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி உள்ள படம் தான் விடுதலை 2. இந்த படத்தில்    மஞ்சு வாரியார், இளவரசு, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தற்போது பாகம் 2 உருவாகி உள்ளது. இதனுடைய ட்ரைலர் சமீபத்தில்  வெளியிடப்பட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரில் ஒருவர் தான் வெற்றி மாறன். அவருடைய படம் என்றாலே அதை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பர்த்து இருப்பார்கள். படத்தில் ஒரு வசனத்தில் தத்துவம் இல்லாததலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க.. அது முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது. என்று கூறப்பட்டுள்ளது. அது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 மேலும் படம் வருகிற  20 ம் தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின்  இசையமைப்பாளர் இளையராஜா படத்தின் பின்னணி இசை பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed