பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் இளையராஜாவிடம் நேரில் சென்று ஆசி வாங்கிய இயக்குனர் கங்கை அமரன்.. வாழ்த்தும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் கோழிகூவுதே என்ற படத்தில் இசை அமைத்ததன் மூலமாக தன்னுடைய இசை பயணத்தை தொடங்கியவர் இசையமைப்பாளர் கங்கை அமரன். இவர் இசையமைப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர். மேலும் இவர் இயக்கத்தில் வெளிவிவந்த கரகாட்ட காரன் படம் மிகவும் பிரபலம் ஆனது. இன்றும் அந்த படம் அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
மேலும் இவர் பல படங்களில் இசையமைத்து தானுடைய வெற்றி பயணத்தை நிலைநாட்டி உள்ளார். மேலும் இவர் இசையில் வல்லவர் ஆன இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி ஆவார். மேலும் இவரும் இவரது தம்பி கங்கை அமரனும் சில காரணங்களினால் நேரில் சந்தித்து கொள்ளாமல் இருந்தனர். இந்நிலையில் கங்கை அமரன் தன்னுடைய 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணன் இளையராஜாவிடம் நேரில் சென்று ஆசி வாங்கியுள்ளார்.
மேலும் இளையராஜா பிறந்த நாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். இந்நிலையில் அவர்களுடன் கங்கை அமரனின் மகன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் உள்ளார். இதனை வெங்கட்ப்ரபு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த போட்டோஸ்களை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள். மேலும் ரசிகர்கள் பலரும் கங்கை அமரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.