விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது..!

1994 ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்றவர் உலக அளவில் பேமஸ் ஆன பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி பட்டம் வென்ற பொழுது சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது சினிமா உலகம். இவர் இந்திய சினிமாவில் மட்டும் இல்ல உலக அளவில் உள்ள சினிமாவிலும் இவருடைய மவுசு பெரும் அளவில் தான் உள்ளது.இவர் மணிரத்தினம் இயக்கிய இருவர் படம் மூலமாக அறிமுகம் ஆனவர். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்  பிரசாந்த்க்கு ஜோடியாக ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். மேலும் இவர் ஜீன்ஸ் படத்தினை தொடர்ந்து  கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் மம்புட்டிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதனை தொடர்ந்து எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ், ஹிந்தி, மலையாளம், பெங்காலி என பல மொழிகளில் நடித்துளளார். இவரும் பாலிவூட் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் மகன் நடிகர் அபிஷேக் பச்சனும்  காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்று ஒரு பெண் குழந்தை உள்ளது.

 இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்திகள் பரவி இருந்தது. மேலும் பல சர்ச்சை செய்திகளும் வந்தன. இந்நிலையில் அதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் இணைந்து மும்பையில் நடந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுடன் தாயார் பிரிந்த்யாவும் கலந்து உள்ளார். இவர்கள் மூன்று பேறும் நிகழ்ச்சியில சந்தோசமாக இருந்துள்ளனர். அதனை டைரக்டர் அணு போட்டோ எடுத்து அவரது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். தற்போது இவர்களது போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

You may have missed