ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன் இருந்தானாம்…!வியப்பூட்டும் வகையில் நடிகர் கவினின் வித்தியாசமான போட்டோ ஷூட்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கவின் நடித்துள்ளார். இவர் விஜய் டிவியில் சீரியலில் நடித்து வந்தவர்.இவர் நடித்த முதல் படம் லிப்ட் இந்த படம் அவருக்கு பெரிதளவில் நல்வாய்ப்பினை அமைக்கவில்லை. மேலும் இவர் நடித்து வெளிவந்த டாடா படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. மேலும் இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு ரசிகர்களும் அதிகளவில் ஆனனர்.டாடா படத்தினை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்தார்.தற்போது இயக்குனர்நெல்சன் இயக்கதில் “ப்ளடி பெக்கர்” என்ற படத்தினை நடித்துள்ளார் .

இந்நிலையில் கவின் நடிப்பில் வெளிவர இருக்கிற ப்ளடி பெக்கர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கவின் யாசகராக நடித்துள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. மேலும் இந்த படத்தில் கவினின் தோற்றமும் வித்தியாசமாக இருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளிவருகிறது. இதை தொடர்ந்து இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கான போட்டோஸ் மற்றும் வீடியோஸ்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கவின் பிச்சைகாரன் வேடம் போட்டிருந்த போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒரு ஊர்ல ஒரு பிச்சைகாரன் இருந்தானாம். அவனை பிச்சைகார பயலே, ஏய், யோவ் என்று எல்லாம் கூறுவர்களாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

You may have missed