20_வயதில் பாடி பில்டிங்கில் மிஸ்டர் மெட்ராஸ் பட்டம் பெற்ற சரத்குமார்… அப்போது எப்படி இருந்திருக்காருன்னு பாருங்க.!

சுப்ரீம் ஸ்டார் என தன் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சரத்குமார். இந்த வயதில் தன் உடம்பை நச்சென வைத்திருக்கும் சரத்குமாரை அதற்காகவே ரசிக்கும் கூட்டம் உண்டு. 1954ல் ராமநாதன்_புஷ்பலீலா தம்பதிக்கு புதுதில்லியில் பிறந்தார் சரத்குமார்.

சென்னை நியூ காலேஜில் பி.எஸ்.சி மேத்ஸ் படித்தார். இதுவரை 130 படங்களுக்கும் மேல் நடித்துள்ள சரத்குமார் பாடிபில்டர், நடிகர், அரசியல்வாதி, என பன்முகத்திறன் கொண்டவர்.

இந்த வயதிலும் உடம்பை நச்சென வைத்திருக்கும் சரத்குமார் அதற்கென பிரத்யேகமாக உடற்பயிற்சிகள் செய்பவர். சரத்குமாருக்கு அப்போது இருபது வயது இருக்கும். 1974ல் மிஸ் சென்னை ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு பட்டம் வாங்கினார்.

இப்போது அந்த வெற்றியின் போது சரத்குமார் கைகளைகட்டிக்கொண்டு தன் புஜங்கள் புடைக்க கொடுத்த போஸ் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த அரிய புகைப்படத்தைப் பாருங்கள்..நம்ம சுப்ரீம் ஸ்டார் அப்பவே ஆணழகன் தான்!

You may have missed