தல அஜித் போல் கார் ரேஸ் போட்டிக்கு மாஸ்ஸாக களம் இறங்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் மட்டும் அல்ல கார் பந்தயத்திலும் முன்னோடியாக கலக்குவார் என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும். கார் பந்தயம் என்றாலே அஜித் ரசிகர்களுக்கு முதலில் நேபகத்துக்கு வருவது தல அஜித் தான். அவர் சில காலமாக கார் பந்தயத்தில் இருந்து விலகி இருந்தார். குட்டி விமானம் தயாரிப்பது பைக் ரைட் ,பைக் ரேஸ் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் கார் ரேஸ்ல் தன்னுடைய பங்களிப்பை காண்பிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வந்தது.

அவரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷும் கார் ரேஸ்ல் தன்னுடைய பயணத்தை தொடரலாம் என அதில் ஆர்வம் காட்டி வருகிறார் மேலும் அவர் அபுதாபியில் தன்னுடைய கார் ரேஸ் பயிற்சியில் கலந்து கொண்ட போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் அதில் அதிசய அனுபவங்களுடன் நினைவுகளை உருவாக்குவேன் என்றும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கடந்த சில ஆண்டுகளாக கார் பந்தயத்துக்கான பயிர்ச்சி எடுத்து மாநில அளவிலான போட்டிகளிலும் மேலும் சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.