தேவதை போல் சாரியில் மின்னும் அழகு தேவதை கீர்த்தி சுரேஷ்…. ட்ரெண்ட் ஆகும் போட்டோஸ்…!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் திரைப்பட இயக்குனர் சுரேஷ் குமார் மற்றும் பழம் பெரும் நடிகை மேனகாவின் மகள் ஆவார். இவர் கீதாஞ்சலி என்னும் மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர். மேலும் இவர் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலமாக அறிமுகமானவர். இருப்பினும் சிவகார்த்திகேயன் உடன் நடித்த ரஜினி முருகன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார். இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

மேலும் அந்த படத்தினை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. அதுவும் முக்கிய நடிகர்கள் உடன் தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன .அதனை தொடர்ந்து ரெமோ, பைரவா, சாமி 2, அண்ணாத்த, சர்கார், சண்டக்கோழி 2 என இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்தது. இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தை கொண்டு சென்றுள்ள கீர்த்தி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் என்னும் படத்தில் வருண் தவான் நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் சாரியில் தேவதை போல் மின்னும் போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

You may have missed